/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பயன்பாட்டிற்கு வராத உயர்கோபுர மின்விளக்கு
/
பயன்பாட்டிற்கு வராத உயர்கோபுர மின்விளக்கு
ADDED : நவ 04, 2024 07:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி ; அமராவதிபுதுார் போலீஸ் ஸ்டேஷன் எதிரே அமைத்த உயர்கோபுர மின்விளக்குகள் எரியாததால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
திருச்சி -- ராமேஸ்வரம் மெயின் ரோட்டில் அமராவதிபுதுார் அமைந்துள்ளது.
இப்பகுதியில் பள்ளி, கல்லுாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படை பயிற்சி மையம், தொழிற்பேட்டை உள்ளன. இந்த ரோட்டில் அதிகவேகமாக வரும் வாகனங்களால் இரவில் விபத்துக்கள் அதிகரிக்கின்றன.
இதை தவிர்க்கவே போலீஸ் ஸ்டேஷன் எதிரே 3 உயர்கோபுர மின்விளக்கு அமைத்தனர். ஆனால், இது வரை இந்த மின்விளக்குகள் எரியாமல், இருள் சூழ்ந்தே கிடக்கிறது.
இதனால், இரவில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதாக புகார் எழுந்துள்ளது.