/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தி.மு.க., கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்
/
தி.மு.க., கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 11, 2025 11:56 PM
சிவகங்கை: சிவகங்கை அரண்மனைவாசல் முன்பு சண்முகராஜா கலையரங்கில் தி.மு.க., கூட்டணி சார்பில் எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
முன்னாள் அமைச்சர் தென்னவன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., தமிழரசி, தி.மு.க., மாவட்ட துணைச் செயலாளர்கள் சேங்கை மாறன், ஜோன்ஸ் ரூசோ, நகர் செயலாளர் துரை ஆனந்த், முன்னாள் எம்.எல்.ஏ., மதியரசன், ஒன்றிய செயலாளர்கள் முத்துராமலிங்கம், ஜெயராமன், கென்னடி, ஆரோக்கியசாமி, மாவட்ட செய்தி தொடர்பாளர் அயுப்கான், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பவானி கணேசன், காங்., சார்பில் எம்.எல்.ஏ., மாங்குடி, முன்னாள் எம்.எல்.ஏ., ராஜசேகரன், மாவட்டத்தலைவர் சஞ்சய், மாநில பொது செயலாளர் சி.ஆர்.சுந்தர்ராஜன்.
மார்க்சிஸ்ட் கம்யூ., மாவட்ட செயலாளர் மோகன், இ.கம்யூ., மாவட்ட செயலாளர் சாத்தையா, விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் பாலையா, ம.தி.மு.க., மாநில நிர்வாகி நக்கீரன், மாவட்ட செயலாளர் பசும்பொன் மனோகரன் மற்றும் திராவிடர் கழகம், இ.யூனியன் முஸ்லிம் லீக், ம.நீ.ம., ம.ம.க., ம.ஜ.க., மூ.மு.க., தவாக உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள், தி.மு.க., நகர, ஒன்றிய, பேரூர், ஊராட்சி நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

