/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வேலை உறுதி திட்ட பெயர் மாற்றம் தி.மு.க., கூட்டணி ஆர்ப்பாட்டம்
/
வேலை உறுதி திட்ட பெயர் மாற்றம் தி.மு.க., கூட்டணி ஆர்ப்பாட்டம்
வேலை உறுதி திட்ட பெயர் மாற்றம் தி.மு.க., கூட்டணி ஆர்ப்பாட்டம்
வேலை உறுதி திட்ட பெயர் மாற்றம் தி.மு.க., கூட்டணி ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 25, 2025 05:42 AM

சிவகங்கை: மத்திய அரசு, வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றம் செய்ததை கண்டித்து மாவட்ட அளவில் தி.மு.க., -கூட்டணி கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
சிவகங்கையில் தி.மு.க., நகர் செயலாளர் துரைஆனந்த் தலைமை வகித்தார். காங்., முன்னாள் எம்.எல்.ஏ., ராஜசேகரன் முன்னிலை வகித்தார். தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் முத்துராமலிங்கம், ஜெயராமன், இந்திய கம்யூ., மாவட்ட துணை செயலாளர் மருது, மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் மோகன், ம.தி.மு.க., தீபன் சக்ரவர்த்தி உட்பட நகராட்சி தி.மு.க., மற்றும் காங்., கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
* மானாமதுரை : தமிழரசி எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். காங்., மாநில நிர்வாகி முருகேசன், மாவட்ட தலைவர் சஞ்சய், நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி, ஒன்றிசெயலாளர் துரை ராஜமணி, அண்ணாதுரை, நகர் செயலாளர் பொன்னுச்சாமி, இளையான்குடியில் முன்னாள் எம்.எல்.ஏ., மதியரசன், ஒன்றிய செயலாளர்கள் தமிழ்மாறன், நகர் செயலாளர் நஜ்முதீன், பேரூராட்சிதுணை தலைவர் இப்ராகிம் பங்கேற்றனர்.
* சிங்கம்புணரி: தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் பூமணி, பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தனர். பேரூராட்சித் தலைவர் அம்பலமுத்து, ஒன்றிய துணை செயலாளர் சிவபுரி சேகர், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் புகழேந்தி, நகர் செயலாளர் கதிர்வேல், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மனோகரன், கவுன்சிலர் ஜெயக்குமார் பங்கேற்றனர்.
* திருப்புவனம்: தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் வசந்தி, சுப்பிரமணியன், கடம்பசாமி, காங்., நடராஜன், சோனை பங்கேற்றனர்.
* சாக்கோட்டை: தி.மு.க., ஒன்றிய செயலாளர் சின்னத்துரை, மாங்குடி எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் தென்னவன் பங்கேற்றனர்.
* தேவகோட்டை: தி.மு.க., நகர் தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் மாதர் சேட், அழகய்யா, ஒன்றிய செயலாளர்கள் ரவி, பூபாளசிங்கம், முன்னாள் கவுன்சிலர் ஜாகிர் உசேன், மத்திய குழு உறுப்பினர் மீரா உசேன், நகர் தலைவர் சஞ்சய், இந்திய கம்யூ., மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் காமராஜ பங்கேற்றனர்.
* திருப்புத்துார்: தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் சண்முகவடிவேல், மாணிக்கம் தலைமை வகித்தனர். நகர் செயலாளர் கார்த்திகேயன், முன்னாள் பேரூராட்சி தலைவர் சாக்ளா, காங்.,மகளிர் அணி மாநில செயலர் ஸ்ரீவித்யா கணபதி, நகர் தலைவர் சீனிவாசன், மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் முருகேசன், இந்திய கம்யூ,., ஒன்றிய செயலாளர் காளிமுத்து, ம.தி.மு.க., ஒன்றிய செயலாளர் ராஜ்மோகன், இந்திய தேசிய முஸ்லீம் லீக் மாவட்டச் செயலாளர் ைஹதர் அலி, வி.சி.க., ஒன்றிய செயலாளர் சின்னத்துரை பங்கேற்றனர்.

