/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் தி.மு.க., - காங்., மோதல் எம்.பி., நிதி பணி எங்களுக்கே
/
திருப்புவனத்தில் தி.மு.க., - காங்., மோதல் எம்.பி., நிதி பணி எங்களுக்கே
திருப்புவனத்தில் தி.மு.க., - காங்., மோதல் எம்.பி., நிதி பணி எங்களுக்கே
திருப்புவனத்தில் தி.மு.க., - காங்., மோதல் எம்.பி., நிதி பணி எங்களுக்கே
ADDED : ஜூலை 18, 2025 11:56 PM

திருப்புவனம்: சிவகங்கை லோக்சபா தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் நடக்கும் பணிகளில் தி.மு.க.,வினர் தலையிடுவதாக கூறி நேற்று காலை யூனியன் அலுவலகத்தில் காங்., கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை லோக்சபா தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் கிராமங்களில் கலையரங்கம், சமுதாயக்கூடம், குடிநீர் தொட்டி, நிழற்குடை உள்ளிட்ட பணிகள் மேற் கொள்ளப்படுகின்றன.
தி.மு.க., சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளை தி.மு.க., ஆதரவு ஒப்பந்தகாரர்களே எடுத்து செய்வது வழக்கம், சிவகங்கை எம்.பி., கார்த்தி தொகுதி மேம்பாட்டு நிதி பணிகளிலும் தி.மு.க.,வினர் தலையிடுவதாக கூறி நேற்று காலை 11:00 மணிக்கு திருப்புவனம் யூனியன் அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
காங்கிரஸ் கட்சியினர் கூறுகையில்: தி.மு.க.,வில் இரண்டு கோஷ்டிகள் உள்ளனர். எம்.பி., நிதி பணிகளை காங்கிரஸ் தரப்பினர் எடுத்து செய்கிறோம் என கூறினால் தி.மு.க.,வினர் அங்கும் வந்து தகராறு செய்கின்றனர்.
அதிகாரிகளிடம் முறையிட்டால் தி.மு.க.,வினரை போய் பார்க்க சொல்கின்றனர். எம்.பி., நிதி பணிகளுக்கு நாங்கள் ஏன் தி.மு.க.,வினரை போய் பார்க்க வேண்டும், எனவே மாவட்ட நிர்வாகம் எம்.பி., நிதி பணிகளை எங்களுக்கே வழங்க வேண்டும், என்றனர்.