/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை நகராட்சி கூட்டத்தில் அடிதடி தி.மு.க.,- காங்., கவுன்சிலர்கள் தர்ணா
/
சிவகங்கை நகராட்சி கூட்டத்தில் அடிதடி தி.மு.க.,- காங்., கவுன்சிலர்கள் தர்ணா
சிவகங்கை நகராட்சி கூட்டத்தில் அடிதடி தி.மு.க.,- காங்., கவுன்சிலர்கள் தர்ணா
சிவகங்கை நகராட்சி கூட்டத்தில் அடிதடி தி.மு.க.,- காங்., கவுன்சிலர்கள் தர்ணா
ADDED : டிச 20, 2024 01:55 AM

சிவகங்கை:சிவகங்கை நகராட்சியில் காங்., கவுன்சிலரை தலைவர் துரை ஆனந்த் (தி.மு.க.,)அடித்ததாக கூறி அக்கவுன்சிலரும், தீர்மானத்தில் தவறு இருப்பதால் நிறைவேற்றக்கூடாது எனக்கூறி துணை தலைவர் கார்கண்ணனும் (தி.மு.க.,) வெளிநடப்பு செய்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
சிவகங்கை நகராட்சி கவுன்சில் கூட்டம் நேற்று தலைவர் துரை ஆனந்த் தலைமையில் நடந்தது. துணை தலைவர் கார்கண்ணன் (தி.மு.க.,), கமிஷனர் கிருஷ்ணராம் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் துவங்கியதும் கார்கண்ணன் பேசும்போது, என் வார்டிற்கு ஒன்றும் செய்யவில்லை. மேலும் இன்று தயாரித்த 101 தீர்மானத்திலும் தவறு உள்ளதால் அவற்றை நிறைவேற்றக்கூடாது எனக்கூறி வெளிநடப்பு செய்து, நகராட்சி முன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
தொடர்ந்து நடந்த கூட்டத்தில் 1 வது வார்டு கவுன்சிலர் (காங்.,) எம்.மகேஷ்குமாரும், என் வார்டுக்கு எந்தவித பணிகளும் செய்யவில்லை. மழைக்காலத்தில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றவில்லை என கூறினார்.
இதில் வாக்குவாதம் ஏற்பட்டதால் இருக்கையில் இருந்து இறங்கி வந்த நகராட்சி தலைவர் தன்னை தாக்கியதாக கூறி முகத்தில் காயத்துடன் காங்., கவுன்சிலர் வெளியே ஓடிவந்து அவரும் தர்ணாவில் ஈடுபட்டார். இவர்கள் இருவருக்கும் ஆதரவாக 7 வது வார்டு கவுன்சிலர் (தி.மு.க.,) காந்தியும் தர்ணாவில் பங்கேற்றார்.
நேற்று காலை 11:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை தர்ணாவில் ஈடுபட்ட துணை தலைவர், கவுன்சிலர்களிடம் தாசில்தார் சிவராமன், இன்ஸ்பெக்டர் அன்னராஜ், நகராட்சி கமிஷனர் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர்.
நிர்வாகத்தில் நடைபெறும் குறைகளை கண்டறிய நகராட்சிகளின் நிர்வாக கமிஷனரே நேரடி விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதை புகாராக தயாரித்து கலெக்டர் மூலம் அரசுக்கு அனுப்புமாறு தெரிவித்து, கலைந்து போக செய்தனர்.
இதனால் நகராட்சி அலுவலகத்திற்கு நேற்று மதியம் 2:00 மணி வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தொடர்ந்து நிருபர்களை, கவுன்சில் கூட்டத்திற்குள் தலைவர் அனுமதிப்பதில்லை என கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.
கவுன்சிலரை அடிக்கவில்லை
துரை ஆனந்த் கூறியதாவது: காலிமனையிட வரிவிதிப்பை ரத்து செய்வதற்கான தீர்மான எண் 91ஐ மட்டுமே நிறுத்தினோம். மற்ற அனைத்து தீர்மானமும் நிறைவேறியது. துணை தலைவர் மட்டுமே வெளிநடப்பு செய்தார். காங்., கவுன்சிலர் மகேஷ்குமார் வார்டுக்கு ரூ.1 கோடி வரை பணி செய்து கொடுத்தும் ஒன்றும் செய்யவில்லை என பேசினார்.
இதனால் அவரிடம் உள்ள 'மைக்கை' வாங்குமாறு ஊழியரிடம் தெரிவித்தேன். அந்த ஊழியரை தான் அவர் தாக்கினார். நான் கவுன்சிலரை அடிக்கவில்லை, என்றார்.