ADDED : ஜூலை 02, 2026 11:05 PM
கல்லல்: கல்லலில் மணல் கடத்தல் வாகனத்தை பிடித்துச் சென்ற போலீஸ் எஸ்.ஐ., மீது தாக்குதல் நடத்திய தி.மு.க., நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே உள்ள சாத்தம்பட்டி சருகனி பகுதிக்கு போலீசார் சென்ற போது அங்கு சிலர் மணல் கடத்தலில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் மணல் அள்ளியவர்கள் தப்பினர்.
எஸ்.ஐ., துரைசிங்கம் தலைமையிலான போலீசார் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், கல்லல் ஒன்றிய தி.மு.க., இளைஞரணி துணை அமைப்பாளர் கல்லுப்பட்டியைச் சேர்ந்த அடைக்கலராஜ் 32, சிறைபிடித்த வாகனத்தை விடும்படி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
விடுவிக்காததால், எஸ்.ஐ., துரைசிங்கத்தை தாக்கி யுள்ளார்.
இதில் எஸ்.ஐ., காயமடைந்த நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட அடைக்கலராஜ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
