ADDED : மார் 05, 2024 05:48 AM
சிவகங்கை, : சிவகங்கையில் தி.மு.க., சார்பில் நிதிநிலை அறிக்கை பொதுக்கூட்டம் நடந்தது. நகராட்சி தலைவர் துரை ஆனந்த் தலைமை வகித்தார். கல்வித்துறை அமைச்சர் மகேஷ், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிகருப்பன் பேசினர்.
முன்னாள் அமைச்சர் தென்னவன், எம்.எல்.ஏ., தமிழரசி, மாநில விவசாய அணி துணைச் செயலாளர் முருகவேல், மாவட்ட துணைச் செயலாளர் மணிமுத்து, சேங்கைமாறன், நகராட்சி துணைத் தலைவர் கார்கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
* தேவகோட்டையில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள், தி.மு.க.அரசின் பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டம் நகர செயலாளர் பாலமுருகன் தலைமையில் நடந்தது.
மாவட்ட செயலாளர், அமைச்சர் பெரிய கருப்பன் தி.மு.க. தலைமை நிலைய பேச்சாளர் சவுமியன், முன்னாள் அமைச்சர் தென்னவன், சேங்கை மாறன் தி.மு.க., நிர்வாகிகள் அந்தோணி சேவியர், மதார்சேட் பங்கேற்றனர்.

