ADDED : பிப் 26, 2026 07:31 AM
அ நிறம் | அளவு
சிவகங்கை: சிவகங்கையில் தி.மு.க., சட்டமன்ற தொகுதி சார்பாக வெல்லும் தமிழ் பெண்கள் என்ற தலைப்பில் ஸ்டாலின் மகளிர் படை அணி ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டுறவுத் துறை அமைச்சர் மாவட்ட செயலாளர் பெரியகருப்பன் தலைமை வகித்து பேசினார். நகர செயலாளர் துரைஆனந்த் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன், எம்.எல்.ஏ., தமிழரசி, தொகுதி பொறுப்பாளர் சண்முகம், ஒன்றிய செயலாளர்கள் ஜெயராமன், முத்துராமலிங்கம், மந்தக்காளை, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பவானி கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
