/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மத உணர்வை கொச்சைப்படுத்தும் தி.மு.க., முருக பக்தர்கள் பதில் கொடுப்பார்கள்

ADDED : டிச 10, 2025 09:01 AM
காரைக்குடி: ஹிந்துக்களின் மத உணர்வை கொச்சைப்படுத்தும் தி.மு.க.,விற்கு 2026ல் முருக பக்தர்கள் உரிய பதில் கொடுப்பார்கள் என பா.ஜ.,தேசிய செயற்குழு உறுப்பினர் எச். ராஜா தெரிவித்தார்.
காரைக்குடியில் அவர் கூறியதாவது: ஹிந்து அமைப்புகள் 40 ஆண்டுகளாக திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறது. ஹிந்து மத உணர்வுகளை கொச்சைப்படுத்துவது தி.மு.க.,வின் தொழிலாக மாறி இருக்கிறது.
ஹிந்துக்கள் நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் விதமாக அதை சர்வே கல் என்று கனிமொழி தெரிவிக்கிறார். இப்பிரச்னையில், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த தனி நபரோ அமைப்போ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
அறநிலையத்துறையின் கீழ் இருக்கின்ற கோயில்களுக்கு, மொத்தம் இருக்கின்ற நிலம் எவ்வளவு, நேரடியாக எவ்வளவு நிர்வகிக்கப்படுகிறது, ஆக்கிரமிப்பில் எவ்வளவு இருக்கிறது. இதற்கு எந்த பதிலும் இல்லை. ஹிந்துக்களின் மத உணர்வை கொச்சைப்படுத்தும் தி.மு.க.,விற்கு 2026ல் உரிய பதிலை முருக பக்தர்கள் கொடுப்பார்கள்.
தமிழகத்தில் இல்லாத பாதுகாப்பு புதுச்சேரியில் இருப்பதாக விஜய் தெரிவித்திருந்தால் அது உண்மை தான். உண்மையை யார் சொன்னாலும் வரவேற்பேன்.