ADDED : ஏப் 29, 2025 11:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம்:
திருப்புவனம் வட்டாரத்தில் நாளுக்கு நாள் நாய்கள் தொல்லையால் முதியோர்கள், சிறுவர் சிறுமியர் வெளியில் நடமாட முடியாமல் அச்சத்தில் உள்ளனர்.
திருப்புவனத்தில் இறைச்சி கடைகள் ஏராளமாக செயல்பட்டு வருகின்றன. கடைகளில் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல் அப்படியே ரோட்டில் வீசுகின்றனர். கழிவிற்காக சண்டையிடும் நாய்கள் ரோட்டில் செல்பவர்களை கடித்து குதறுகின்றன. மடப்புரத்தில் இதுவரை பத்திற்கும் மேற்பட்டவர்களை நாய்கள் கடித்து குதறியுள்ளன. மாவட்ட நிர்வாகம் தெரு நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் அல்லது தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

