/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஏ.டி.எம்.,மையங்களில் ஓய்வெடுக்கும் நாய்கள்
/
ஏ.டி.எம்.,மையங்களில் ஓய்வெடுக்கும் நாய்கள்
ADDED : அக் 09, 2025 04:21 AM

திருப்புவனம் : திருப்புவனத்தில் செயல்படும் ஏ.டி.எம்.,மையங்கள் பலவும் தெரு நாய்கள் தங்குமிடமாக மாறி வருகின்றன.
திருப்புவனத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் ஏ.டி.எம்.,மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தற்போது தீபாவளி நேரம் என்பதால் பலரும் பணம், எடுக்க பணம் செலுத்த ஏ.டி.எம்., மையங்களுக்கு வந்து செல்கின்றனர். ஒரு சில ஏ.டி.எம்.,களை தவிர்த்து மற்றவற்றில் தினசரி பணம் வைப்பதில்லை. வங்கிகள் தனியார் ஏஜன்சிகள் மூலம் ஏ.டி.எம்., மையங்களில் பணம் நிரப்புகின்றனர். திருப்புவனம் நகரில் உள்ள ஏ.டி.எம்., மையங்களில் போதிய அளவு பணம் வைப்பதில்லை, ஏ.டி எம்., மையங்களை சுத்தமாக பராமரிப்பதில்லை.
வாடிக்கையாளர்கள் அதிகளவில் வராததால் தெரு நாய்கள் பலவும் ஏ.டி.எம்., மையங்களை தங்குமிடமாக மாற்றி வருகின்றன. வங்கி நிர்வாகங்கள் ஏ.டி.எம்., மையங்களில் முழுமையாக பணம் நிரப்ப வேண்டும், மையங்களை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.