/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குடிநீர் குழாய் உடைந்து வீணாக ஓடிய தண்ணீர்
/
குடிநீர் குழாய் உடைந்து வீணாக ஓடிய தண்ணீர்
ADDED : பிப் 20, 2025 07:37 AM

இளையான்குடி: இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 55 ஊராட்சிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும், இளையான்குடி பேரூராட்சி பகுதியில் உள்ள 18 வார்டுகளிலும் உள்ள வீடுகளுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் திருச்சியில் இருந்து ராமநாதபுரம் வரை செல்லும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 15 வருடங்களுக்கும் மேலாகி விட்டதால் ஆங்காங்கே குழாய்கள் உடைந்து அவ்வப்போது குடிநீர் வீணாகி வருகிறது.
இந்நிலையில் இளையான்குடியிலிருந்து பரமக்குடி செல்லும் ரோட்டில்மேலப்பள்ளிவாசல் மகளிர் மேல்நிலைப்பள்ளி எதிரே குடிநீர் குழாய் உடைந்து கடந்த சில நாட்களாக குடிநீர் வீணாக ரோட்டில் ஓடி வருவதால் அப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.

