/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துாரில் குடிநீர் திட்டம்: 70 சதவீதம் சோதனை நிறைவு
/
திருப்புத்துாரில் குடிநீர் திட்டம்: 70 சதவீதம் சோதனை நிறைவு
திருப்புத்துாரில் குடிநீர் திட்டம்: 70 சதவீதம் சோதனை நிறைவு
திருப்புத்துாரில் குடிநீர் திட்டம்: 70 சதவீதம் சோதனை நிறைவு
ADDED : நவ 19, 2025 06:43 AM
திருப்புத்துார்: திருப்புத்துார் நகரில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்க அம்ருத் 2.0 குடிநீர் விஸ்தரிப்புத் திட்டத்திற்கான குடிநீர் சோதனை ஓட்டம் 70 சதவீதம் முடிந்துள்ளது.
திருப்புத்துாரில் மத்திய அரசின் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ 21.74 கோடியில் குடிநீர் விஸ்தரிப்பு திட்டம் கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் திருப்புத்துாரில் கூடுதலாக மூன்று மேல்நிலைத் தொட்டி, இரண்டு தரை மட்டத் தொட்டி, நகரைச் சுற்றி பத்து ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.
நகர் முழுவதும் அனைத்து வீடுகளுக்கும் செல்லும் வகையில் புதிய விநியோகக்குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.
5 ஆயிரம் இலக்கை வைத்து தற்போது 4600 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் 6 ஆயிரம் இணைப்புகள் வரை தர முடியும்.
தற்போது குடிநீர் இணைப்பு குழாய்களில் நீரோட்டம், நீர் அழுத்தப் பரிசோதனை நடந்து வருகின்றன. நகரில் 70 சதவீத இடங்களில் இப்பணி முடிந்துள்ளது. குடிநீர் கடத்தும் முக்கிய குழாய்களின் ஏர்வால்வு,கேட்வால்வுகளில் 50 சதவீதம் பரிசோதனை நிறைவடைந்துள்ளது. சோதனையில் உள்ள நீர்க்கசிவை நீக்கும் பணி நடந்து வருகிறது.
காவிரி நீர் தடைப்பட்டால் மாற்றாக ஆழ்குழாய் குடிநீர் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

