ADDED : மார் 06, 2026 05:38 AM
அ நிறம் | அளவு
திருப்புத்துார்: திருப்புத்துாரில் அம்ரூத் 2.0 திட்டம் மூலம் குடிநீர் திட்டத்தை முதல்வர் காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார். அமைச்சர் பெரியகருப்பன் முன்னிலை வகித்தார்.
பேரூராட்சி தலைவர் கோகிலாராணி, துணை தலைவர் கான்முகமது, கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
ரூ.21.67 கோடி மதிப்பிலான திட்டம் மூலம் நகரில் உள்ள 28,264 பேர்களுக்கு தலா நாள் ஒன்றுக்கு 135 லிட்டர் குடிநீர் வழங்கப்படும்.
இத்திட்டத்திற்காக தரைமட்ட, மேல்நிலை தொட்டிகள் மூலம் 17.5 லட்சம் லிட்டர் வரை நீர் ஏற்றப்படுகிறது.
