ADDED : நவ 01, 2024 04:50 AM
அ நிறம் | அளவு
தேவகோட்டை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கார் டிரைவர் வேல்முருகன், 45, கைது செய்யப்பட்டார்.
தேவகோட்டை அருகே செலுகை மேலக்குடியிருப்பைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர் தேவகோட்டையைச் சேர்ந்த ஒருவரது காருக்கு, ஆக்டிங் டிரைவராக பணி புரிந்தார். அங்கு வேலைக்கு சென்ற போது, 4 வயது சிறுமியை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தார் என கூறப்படுகிறது.
தேவகோட்டை மகளிர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, போக்சோ வழக்கில் டிரைவரை கைது செய்து விசாரிக்கிறார்.
