ADDED : ஏப் 24, 2025 07:00 AM

சிவகங்கை: வேளாண் பொறியியல் துறையில் இயந்திர டிரைவர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, சிவகங்கை மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறை மூலம் கால்வாய் துார்வாருதல், வேளாண் பணிக்கு தேவையான இயந்திரங்கள், கருவிகள் பொறியியல் துறையால், இ- வாடகை ஆப் மூலம் அரசு நிர்ணயித்த குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. வேளாண் பணிகளில் இயந்திரங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளன.
இம்மாவட்டத்தில் அரசு கைவசம் உள்ள 22 இயந்திரங்களை இயக்க டிரைவர்கள் தேவைப்படுகின்றனர். இப்பணிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி, கனரக டிரைவிங் லைசென்ஸ், நல்ல உடல் தகுதி சான்று, ஆதார் அட்டை சான்றுடன் உதவி செயற்பொறியாளர், வேளாண் பொறியியல் துறை அலுவலகம், தொண்டி ரோடு சிவகங்கை மற்றும் காரைக்குடி அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம், என்றார்.

