ADDED : ஜன 15, 2025 11:47 PM
காரைக்குடி : காரைக்குடி அருகேகானாடுகாத்தானில் பயணிகளை ஏற்றிக்கொண்டு டூர் வந்த டிராவல்ஸ் டிரைவர், அதிக சவாரி கிடைக்காத ஆத்திரத்தில் சக டிரைவரை கத்தியால் குத்தி கொலை செய்தார்.
சென்னை அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ் மகன் சாமுவேல் 41. சென்னையில் டிராவல்சில் ஓராண்டாக டிரைவராக இருந்தார்.  அதே டிராவல்சில் திருநெல்வேலி நெல்லையாபுரத்தைச் சேர்ந்த சண்முகம் மகன் வெள்ளை பாண்டி 49, என்பவர் 7 ஆண்டுகளாக டிரைவர் வேலை செய்து வருகிறார்.
இவ்விருவரும் நேற்று முன்தினம் தனித்தனி வாகனங்களில் சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு கானாடுகாத்தான் வந்தனர். இரவு இருவரும் ஒரே ஓட்டலில் தங்கி சாப்பிட சென்றுள்ளனர்.
அப்போது, வேலைக்குச் சேர்ந்து ஒரே வருடத்தில் அதிக சவாரி உனக்கு எப்படி கிடைத்தது என்று வெள்ளைபாண்டி கேட்டு  சாமுவேலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் மோதல் ஏற்பட காரில் வைத்திருந்த கத்தியை எடுத்து சாமுவேலை வெள்ளைபாண்டி குத்தினார். பலத்த காயமடைந்த சாமுவேல்  மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். செட்டிநாடு போலீசார் வெள்ளைபாண்டியை கைது செய்தனர்.

