நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : சென்னை அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ் மகன் சாமுவேல், 41; சென்னையில் டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றில் ஓராண்டாக டிரைவராக இருந்தார். அதே நிறுவனத்தில், திருநெல்வேலியைச் சேர்ந்த சண்முகம் மகன் வெள்ளைப்பாண்டி, 49, என்பவர் ஏழு ஆண்டுகளாக டிரைவராக இருந்தார். இவ்விருவரும் நேற்று முன்தினம் தனித்தனி வாகனங்களில் சுற்றுலா பயணியரை ஏற்றிக்கொண்டு கானாடுகாத்தான் வந்தனர்.
அப்போது, உனக்கு எப்படி அதிக சவாரி கிடைத்தது என்று வெள்ளைப்பாண்டி கேட்டு, சாமுவேலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருவருக்கும் மோதல் ஏற்பட, காரில் வைத்திருந்த கத்தியை எடுத்து சாமுவேலை, வெள்ளைப்பாண்டி குத்தினார். பலத்த காயமடைந்த சாமுவேல் உயிரிழந்தார். செட்டிநாடு போலீசார், வெள்ளைப்பாண்டியை கைது செய்தனர்

