/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நில புரோக்கர் கொலை வழக்கில் டிரைவருக்கு ஆயுள் தண்டனை
/
நில புரோக்கர் கொலை வழக்கில் டிரைவருக்கு ஆயுள் தண்டனை
நில புரோக்கர் கொலை வழக்கில் டிரைவருக்கு ஆயுள் தண்டனை
நில புரோக்கர் கொலை வழக்கில் டிரைவருக்கு ஆயுள் தண்டனை
ADDED : செப் 25, 2024 01:49 AM

சிவகங்கை:சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் நில புரோக்கர் ராமச்சந்திரனை 61, கொலை செய்த வழக்கில் டிரைவர் சத்தியமூர்த்திக்கு 27, ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சொர்ணம் ஜெ நடராஜன் தீர்ப்பளித்தார்.
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் சிங்கம்புணரியில் இடம் வாங்கி விற்று வந்தார்.
2021 செப்., 16 சிங்கம்புணரியைச் சேர்ந்த டிரைவர் சத்தியமூர்த்தியுடன் பொது மயானத்தில் மது அருந்தியுள்ளார். அப்போது ராமச்சந்திரன் அணிந்திருந்த நகை, அவரிடமிருந்த பொருட்களை திருட நினைத்த சத்தியமூர்த்தி திடீரென தாக்கினார். இதில் ராமச்சந்திரன் இறந்தார்.
பிறகு சத்தியமூர்த்தி அங்கிருந்த குப்பையை வைத்து ராமச்சந்திரன் உடலை தீ வைத்து எரித்து விட்டு தப்பி சென்றார்.
ராமச்சந்திரன் உடல் பாதி எரிந்த நிலையில் அப்பகுதியில் கிடந்தது. இதுகுறித்து வி.ஏ.ஓ., போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் விசாரித்து சத்தியமூர்த்தியை கைது செய்தனர். இவ்வழக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் அழகர்சாமி ஆஜரானார். சத்தியமூர்த்திக்கு கொலை குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதமும், கொலை செய்த தடயத்தை மறைத்ததற்காக 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.1000 அபராதமும், பொருட்களை திருடியதற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து நீதிபதி சொர்ணம் ஜெ நடராஜன் தீர்ப்பளித்தார். தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிடப்பட்டது.