/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்
/
போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்
ADDED : ஆக 12, 2025 06:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை : தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்டம், உடற்கல்வி துறை இணைந்து போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை நடத்தினர்.
உடற்கல்வி துறை இயக்குனர் லுார்துராஜா முன்னிலையில் முதல்வர் நாவுக்கரசு கொடியசைத்து துவக்கி வைத்தார். அமராவதிபுதுாரில் தொடங்கிய மாரத்தான் தேவகோட்டை தியாகிகள் பூங்காவை அடைந்தது.
வணிகவியல் மேலாண்மை மாணவர் ராமச்சந்திரன் முதலிடமும், இளங்கலை இயற்பியல் மாணவர் கைலாச குமார் இரண்டாமிடமும், வணிக மேலாண்மை மாணவர் மெல்வின்ரீபேக், தமிழ் துறை மாணவர் சந்தோஷ் இருவரும் மூன்றாமிடம் வென்றனர்.

