/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இலவச நோட்டு புத்தகம் பாதுகாக்க மாவட்டந்தோறும் கோடவுன் வசதி கல்வி அதிகாரிகள் எதிர்பார்ப்பு

ADDED : மே 10, 2025 01:56 AM

சிவகங்கை:பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் பாடபுத்தகங்கள் உள்ளிட்ட 22 விதமான பொருட்களை பாதுகாக்க மாவட்டம்தோறும் கோடவுன் வசதியை அரசு ஏற்படுத்த வேண்டும் என கல்வி அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழக அளவில் கல்வித்துறை மூலம் 70 லட்சம் மாணவர்களுக்கு பாடபுத்தகம், 60 லட்சம் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், சீருடை, காலணி, கிரையான், புவியியல் வரைபடம், புத்தக பைகள், வண்ண பென்சில், கணித உபகரணம் உட்பட 22 விதமான பொருட்கள் வழங்கப்படுகிறது. பாடபுத்தகங்களை 3 தவணையாக பிரித்து வழங்குகின்றனர். இதனால் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு இலவச பொருட்கள் அரசு மூலம் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இவற்றை பாதுகாக்க இடமின்றி, அரசு மற்றும் தனியார் பள்ளி வகுப்பறைகளில் தான் வைக்க வேண்டியுள்ளது. இதனால் பாதுகாப்பற்ற சூழல், வகுப்பறை பற்றாக்குறை ஏற்படுகிறது.
இதை தவிர்க்க இலவச பொருட்களை பாதுகாக்க கோடவுன் கட்டித்தர வேண்டும் என கல்வி அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
அதிகாரிகள் கூறியதாவது: மாவட்ட தலைநகரில் இருந்து பள்ளிகளுக்கு இலவச பொருட்களை அனுப்ப வாடகை தொகை வழங்குகிறது. இருப்பினும் சில மாவட்டங்களில் அருகில் சரியான வகுப்பறை இல்லாததால் வெகு தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இதை தவிர்க்க மாவட்ட கல்வி அலுவலக வளாகத்தை ஒட்டி அரசு கோடவுன் கட்டித்தந்தால், இலவச பொருட்களை பாதுகாப்புடன் வைக்க முடியும், என்றனர்.