/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திறனாய்வு தேர்வில் 2 பேர் மட்டுமே தேர்ச்சி கல்வி அதிகாரிகள் அதிர்ச்சி

ADDED : ஏப் 14, 2025 05:22 AM
திருப்புவனம்: திருப்புவனம் வட்டார அளவில் திறனாய்வு தேர்வு எழுதிய மாணவர்களில் இரண்டு பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருப்பது கல்வி அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
தேசிய வருவாய் வழி, கல்வி உதவி தொகைக்கு 8ம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு கடந்த பிப்.,22ம் தேதி தேர்வு நடந்தது. திருப்புவனம் வட்டார அளவில் ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளியில் நடந்த தேர்வில் 558 மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாதம் ரூ.1,000 மாணவர்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
இத்தேர்வினை மாநில அளவில் 6,695 பேர் எழுதினர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் தேர்வு எழுதிய 558 மாணவ, மாணவியர்களில் செங்குளம் மாணவர் ஹரிகிருஷ்ணா, திருப்புவனம் அரசு பெண்கள் பள்ளி மாணவி ஆயிஷா மரியம் ஆகிய இருவர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்டம் முழுவதும் தேர்வு எழுதியவர்களில் 153 தேர்வு பெற்றுள்ளனர்.
திருப்புவனம் வட்டாரத்தில் பள்ளிகளில் மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.