/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை வாரச்சந்தையில் கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ.120
/
மானாமதுரை வாரச்சந்தையில் கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ.120
மானாமதுரை வாரச்சந்தையில் கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ.120
மானாமதுரை வாரச்சந்தையில் கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ.120
ADDED : டிச 20, 2024 02:53 AM
மானாமதுரை: மானாமதுரை சந்தையில் கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ.120க்கு விற்பனை செய்யப்பட்டது. தக்காளி சற்று விலை உயர்ந்து 3 கிலோ ரூ.100க்கு விற்பனையானது.
மானாமதுரை வாச்சந்தையில் மதுரை, திருப்புவனம்,திருப்பாச்சேத்தி, இளையான்குடி, சிவகங்கை,பரமக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து 300க்கும் மேற்பட்ட வியாபாரிகள் பல்வேறு பொருட்களை வியாபாரம் செய்து வருகின்றனர்.
நேற்று நடைபெற்ற சந்தையில் எப்போதும் இல்லாத வகையில் கத்தரிக்காய் கிலோ ரூபாய் 120 க்கு விற்பனையானது. காலிபிளவர் பெரியது ஒன்று கடந்த வாரம் ரூ.30க்கு விற்றது இந்த வாரம் ரூ.50க்கு விற்பனையானது. தக்காளி சற்று விலை உயர்ந்து 3 கிலோ ரூ.100க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.70க்கும், பெரிய வெங்காயம் ரூ.50க்கும்,கேரட், முள்ளங்கி,சவ்சவ் ரூ.80, பச்சை மிளகாய் ரூ. 80, பட்டர் பீன்ஸ்,சோயா பீன்ஸ் ரூ.200, சின்னப்பாகற்காய் ரூ.280 , உருளைக்கிழங்கு ரூ.50 என விற்பனையானது.