ADDED : மார் 18, 2026 05:01 AM
திருப்புத்துார்: திருப்புத்துாரில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஹஜ்ரத் பிலால் நற்பணி மன்றம் சார்பில் பெருநாள் அன்பளிப்பு வழங்கப் பட்டது.
இம்மன்றத்தினர் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 45 ஆண்டுகளாக சேலை, மளிகை, அரிசி, காய்கறிகளை அன்பளிப்பு வழங்கி வருகின்றனர். நிர்வாகி பி.ஏ.கே. அலாவுதீன் வரவேற்றார் சிவகங்கை மாவட்ட அரசு டவுன் காஜி கே.எம்.முகமது பாரூக் ஆலீம் தலைமையேற்று மக்களுக்கு அன்பளிப்பு வழங்கி துவக்கி வைத்தார்.
அல் அக்சா பள்ளி இமாம் சிராஜுதீன் கிராத் ஓதினார். தொடர்ந்து நிஸ்வான் மதரஸா துணைத் தலைவர் ஷேக் மகதூன், பெரிய பள்ளிவாசல் ஜமாத் செயலாளர் கான் முகமது,துணை தலைவர் பாபா அமீர் பாதுஷா, பொருளாளர் ராபின் சையது, முன்னாள் பெரிய பள்ளிவாசல் ஜமாத் செயலாளர் அப்துல் காதர், முன்னாள் பேரூராட்சி தலைவர் சாக்ளா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
