ADDED : ஜூலை 08, 2025 10:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை; சிவகங்கை அருகே மதுரை ரோட்டில் உள்ள கோவிலில் 65 வயது மதிக்க தக்க ஒருவர் இறந்த நிலையில் இருந்தார். அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்ததில் அவரது சட்டைப்பையில் இருந்து டிரைவிங் லைசென்சில் அவர் மதுரை பெத்தானியாபுரம் ஸ்டீபன் முத்துராஜா வயது 65 என தெரியவந்தது.
உறவினர்களுக்கு தகவல் கொடுத்த போலீசார் முதியவர் இறப்பு குறித்து விசாரித்து வருகின்றனர்.

