UPDATED : நவ 04, 2026 11:17 AM
ADDED : நவ 04, 2026 11:15 AM
அ நிறம் | அளவு
சிவகங்கை: மதகுபட்டி அருகேயுள்ள பாகனேரியை சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி பொம்மி 75. ஆறுமுகம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்தார்.
பொம்மி தனியாக பாகனேரியில் வசித்தார். தினசரி இரவு பாகனேரி பஸ் நிறுத்தம் அருகில் உள்ள கடை ஒன்றில் துாங்குவார். அக்.30 இரவு பொம்மி அந்த கடையில் படுத்தார். காலை கிராமத்தினர் நடமாட தொடங்கியபோது பொம்மி தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடப்பதை பார்த்து மதகுபட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் சி.சி.டி.வி., காட்சிகளின் அடிப்படையில் திருக்கோஷ்டியூரை சேர்ந்த பாலமுருகனை 53 கைது செய்து விசாரிக்கின்றனர்.
