/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மூதாட்டி கொலை வழக்கு: ஓராண்டாகியும் துப்பு கிடைக்கவில்லை
/
மூதாட்டி கொலை வழக்கு: ஓராண்டாகியும் துப்பு கிடைக்கவில்லை
மூதாட்டி கொலை வழக்கு: ஓராண்டாகியும் துப்பு கிடைக்கவில்லை
மூதாட்டி கொலை வழக்கு: ஓராண்டாகியும் துப்பு கிடைக்கவில்லை
ADDED : ஜன 12, 2025 06:33 AM
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம்காளையார்கோவில் அருகேயுள்ள வெட்டிக்குளத்தைச் சேர்ந்தவர் கருப்புச்சாமி மனைவி ஒய்யம்மை 68.
கணவர் இறந்த நிலையில் தனியாக வசித்து வந்தார். இவருக்கு இரண்டு மகள்கள். அவர்களுக்கும் திருமணம் நடந்து அவர்கள் இருவரும் கணவருடன் வசித்து வருகின்றனர்.
ஒய்யம்மை சந்தையில் வியாபாரம் செய்து வந்தார். கடந்த ஆண்டு ஜன.8ல் வியாபாரம் செய்துவிட்டு ஊருக்கு திரும்பியவரை சிலர் கொலை செய்து அவர் அணிந்திருந்த 5 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர். காளையார்கோவில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். ஒரு வருடம் கடந்தும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.
ஒய்யம்மை பேரனான கடற்படையில் பணிபுரியும் இளமாறன் என்பவர் குற்றவாளிகளை பிடிக்காதது குறித்தும், போலீசார் மீது அதிருப்தி தெரிவித்தும் முதல்வருக்கு கோரிக்கை விடுத்து ஒரு வீடியோவை வலைதளங்களில் வெளியிட்டுள்ளார், அது பரவி வருகிறது.