ADDED : ஜன 29, 2024 05:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: திருப்புத்துாரில் வருவாய்துறை மற்றும் போலீசார் இணைந்து லோக்சபா தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.
திருப்புத்துாரில் நேற்று தேர்தல் விழிப்புணர்வு டூவீலர் ஊர்வலத்தை அதிகாரிகள் நடத்தினர். தாசில்தார் ஆனந்த் தலைமை வகித்தார். பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து ஊர்வலத்தை டி.எஸ்.பி.ஆத்மநாதன் துவக்கினார். ஊர்வலத்தினர் தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், விபத்துக்களில் ஹெல்மெட் தலையை பாதுகாக்கும் விதம் குறித்தும் பதாகைகள் ஏந்தி விளக்கினர். தேர்தல் பிரிவு துணைத்தாசில்தார் அமுதா, இன்ஸ்பெக்டர் செளந்தரபாண்டியன், திருக்கோஷ்டியூர் எஸ்.ஐ. செல்வராகவன் உள்ளிட்ட வருவாய்த்துறை மற்றும் போலீசார் பங்கேற்றனர்.