ADDED : மார் 17, 2024 11:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை : மானாமதுரை இளையான்குடி பகுதிகளில் லோக்சபா தேர்தலுக்கான பிரசார பொதுக் கூட்டங்கள் நடத்தும் இடத்தை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 லோக்சபா தொகுதிகளில் ஒரே கட்டமாக வருகிற ஏப்., 19ல் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் சிவகங்கை லோக்சபா தொகுதிக்குட்பட்ட மானாமதுரை இளையான்குடி பகுதிகளில் பிரசார பொதுக்கூட்டங்கள் நடத்தும் இடத்தை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி மானாமதுரையில் நகராட்சி அலுவலகம் அருகில், வாரச்சந்தை திடல், சிப்காட் பஸ் ஸ்டாப் அருகில், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே குறத்தி அம்மன் கோயில் எதிர்புறம், இளையான்குடியில் வாள் மேல் நடந்த அம்மன் கோயில் திடல், சாலை கிராமம் பஸ் ஸ்டாண்ட் அருகில், சூராணம் பஸ் ஸ்டாண்ட் அருகில் போன்ற இடங்களை தேர்வு செய்துள்ளது.

