/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துாரில் 4 கண்மாய் நிர்வாகிகள் தேர்தல்
/
திருப்புத்துாரில் 4 கண்மாய் நிர்வாகிகள் தேர்தல்
ADDED : டிச 24, 2024 04:36 AM
திருப்புத்துார்: திருப்புத்துார் ஒன்றியத்தில் தேர்தல் நடைபெறாத விடுபட்ட கண்மாய்களுக்கு ஜன.5ல் தேர்தல் நடைபெற உள்ளது.
திருப்புத்துார் ஒன்றியத்தில் பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள 53 கண்மாய்களுக்கு,2022--23ம் ஆண்டில் கண்மாய்களின் நீரினைப் பயன்படுத்துவோருக்கான நிர்வாகிகள் தேர்தல் நடந்தது.
அதில் சட்டம் ஒழுங்கு, சங்கம் பிரிப்பு உள்ளிட்ட காரணங்களால் திருப்புத்துார் பெரியகண்மாய்,கோட்டி அணைக்கட்டு கால்வாய், ஓமக் கண்மாய் மற்றும் கண்ணனி கண்மாய்கள், சின்னக்காவினிக் கண்மாய் ஆகிய நான்கு கண்மாய்களுக்கு நடைபெறவில்லை.
இந்த கண்மாய்களுக்கு தற்போது தேர்தல் நடைமுறை துவங்கியுள்ளது. நேற்றும், இன்றும் வேட்பு மனுத்தாக்கல் நடைபெறுகிறது.
டிச.27ல் மனுக்கள் பரிசீலனை நடைபெறும். போட்டியிருந்தால் தேர்தல் ஜன.5ல் காலை 7:00 முதல் மதியம் 2:00 மணி வரை அப்பகுதிகளில் தேர்தல் நடைபெறும். மாலை 4:00 மணிக்கு திருப்புத்துார் தாசில்தார் அலுவலகத்தில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று முடிவு அறிவிக்கப்படும். கண்மாய்களுக்கு தலைவர் மற்றும் நான்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
திருப்புத்துார் பெரியகண்மாய்க்கு உறுப்பினர்கள் தேர்வு முடிந்து விட்டதால் தலைவர் தேர்வு மட்டும் நடைபெறும். இதே போன்று சிங்கம்புணரி,தேவகோட்டை ஒன்றியங்களிலும் விடுபட்ட கண்மாய்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.