/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் தேர்தல் வினாடி வினா போட்டி
/
சிவகங்கையில் தேர்தல் வினாடி வினா போட்டி
ADDED : ஜன 15, 2024 04:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : 'இந்தியாவில் தேர்தல்கள்' என்ற தலைப்பில் ஜன. 21 அன்று சிவகங்கையில் வினாடி வினா போட்டிகள் நடைபெற உள்ளது.
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான வினாடி வினாபோட்டி சிவகங்கையில் ஜன.,21 அன்று காலை 11:00 மணிக்கு நடைபெற உள்ளது. இப்போட்டியில் பங்கேற்க https://www.erolls.tn.gov.in/quize 2024 என்ற இணையதள முகவரியில் பங்கேற்போர் பெயர், விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.
பெயரினை பதிவு செய்ய ஜன.,18 மற்றும் 19 ஆகிய இரு நாட்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
பெயர், அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி குறிப்பிட வேண்டும். மேலும் விபரத்திற்கு மாவட்ட உதவி மைய எண் 1950 தொடர்பு கொள்ளலாம்.