/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்
/
வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்
ADDED : நவ 15, 2024 06:59 AM
சிவகங்கை: வாக்காளர் பட்டியலில் பெயர் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தை முன்னிட்டு சனி, ஞாயிறுகளில் சிறப்பு முகாம் நடைபெறுவதாக கலெக்டர் ஆஷாஅஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: மாவட்ட அளவில் உள்ள அந்தந்த ஓட்டுச்சாவடிகளில் நவ., 28 வரை வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் நடைபெற உள்ளது. வயது 18 பூர்த்தியடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மனு செய்யலாம். அதே போன்று பெயர், முகவரியில் திருத்தம், இறந்தவர்கள் பெயர் நீக்கம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம். இதற்காக நவ., 16, 17 மற்றும் 23, 24 ஆகிய சனி, ஞாயிறு நாட்களில் சிறப்பு முகாம் நடக்கும். வாக்காளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும் என்றார்.