/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சாலையின் நடுவே மின்கம்பம் வாகன ஓட்டிகளுக்கு அபாயம்
/
சாலையின் நடுவே மின்கம்பம் வாகன ஓட்டிகளுக்கு அபாயம்
சாலையின் நடுவே மின்கம்பம் வாகன ஓட்டிகளுக்கு அபாயம்
சாலையின் நடுவே மின்கம்பம் வாகன ஓட்டிகளுக்கு அபாயம்
ADDED : நவ 28, 2024 05:26 AM

காரைக்குடி: காரைக்குடி தேவகோட்டை செல்லும் சாலையின் நடுவே உள்ள மின்கம்பத்தால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் நிலவுகிறது.
காரைக்குடியில் இருந்து தேவகோட்டை ரஸ்தா செல்லும் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. காரைக்குடி, தேவகோட்டை, ராமநாதபுரம், புதுக்கோட்டை உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பஸ்கள், பள்ளி வேன்கள் வேலைக்குச் செல்வோர் உட்பட பலரும் இவ்வழியாக சென்று வருகின்றனர்.
இந்நிலையில் செஞ்சை கீழ ஊரணி அருகே வாகனங்கள் ஒரு வழி பாதையில் சென்று வருகின்றது. காரைக்குடியில் இருந்து தேவகோட்டை ரஸ்தா செல்லும் ஒரு வழிச்சாலையில், வளைவின் நடுவே மின்கம்பம் உள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவு வருகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. சாலையின் நடுவே உள்ள மின்கம்பத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து விடுகின்றனர்.