/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
போராட்டத்தை அறிவித்த மக்கள் செயலில் இறங்கிய மின்வாரியம்
/
போராட்டத்தை அறிவித்த மக்கள் செயலில் இறங்கிய மின்வாரியம்
போராட்டத்தை அறிவித்த மக்கள் செயலில் இறங்கிய மின்வாரியம்
போராட்டத்தை அறிவித்த மக்கள் செயலில் இறங்கிய மின்வாரியம்
ADDED : அக் 18, 2025 03:57 AM
இளையான்குடி: இளையான்குடி அருகே உள்ள வடக்கு சந்தனுாரில் பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை மாற்றக்கோரி அரசு அதிகாரிகளிடம் போராட்டம் நடத்தப் போவதாக கிராம மக்கள் தெரிவித்ததை தொடர்ந்து மின்வாரியத்தினர் உடனடியாக டிரான்ஸ்பார்மரை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட எஸ்.காரைக்குடி ஊராட்சிக்குட்பட்ட வடக்கு சந்தனுாரில் ஏராள மான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி யில் ஏராளமான விவ சாயிகள் மின் மோட்டார் மூலம் விவசாயம் செய்து வருகின்றனர்.
கடந்த 2 வாரங்களுக்கு முன் இப்பகுதியில் இருந்த டிரான்ஸ்பார்மர் பழு தடைந்ததால் மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்டு வருவது குறித்து மின் வாரியம் மற்றும் அரசு அதிகாரி களுக்கு தகவல் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நேற்று கிராம மக்கள் வடக்கு சந்தனூரில் பஸ் மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தப் போவதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மின்வாரிய அதிகாரிகள் வடக்கு சந்தனுாரில் உள்ள பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை எடுத்து விட்டு புதிய டிரான்ஸ்பார்மரை பொருத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.