/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கருணை அடிப்படையில் பணி அதிகரித்து வழங்க வலியுறுத்தல்
/
கருணை அடிப்படையில் பணி அதிகரித்து வழங்க வலியுறுத்தல்
கருணை அடிப்படையில் பணி அதிகரித்து வழங்க வலியுறுத்தல்
கருணை அடிப்படையில் பணி அதிகரித்து வழங்க வலியுறுத்தல்
ADDED : அக் 20, 2024 01:48 AM
சிவகங்கை:' மருத்துவத் துறையில் கருணை அடிப்படையில் காலிப்பணியிடங்கள் 25 சதவீதம் உள்ளதை 50 சதவீதமாக மாற்றி நிரப்ப வேண்டும் 'என தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சுப்பணி அலுவலர் சங்க மாநிலத்தலைவர் தேசிங்கு ராஜன் தெரிவித்தார்.
சிவகங்கையில் அவர் கூறியதாவது:
இந்தியாவின் மற்ற மாநிலங்களில் உள்ளது போல தமிழகத்திலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மாறாக மத்திய அரசு அறிவித்த ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கூடாது. கொரோனா காலத்தில் பறிக்கப்பட்ட சரண் விடுப்பு சலுகையை மீண்டும் வழங்க வேண்டும்.
7வது ஊதிய குழுவில் 21 மாத ஊதிய நிலுவையை வழங்க வேண்டும். அமைச்சுப் பணி அலுவலர்களுக்கும், எழுத்தர்கள், தட்டச்சர்கள், இளநிலை உதவியாளர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு ஊதிய மாற்றம் வேண்டும். அமைச்சுப் பணியாளர்களுக்கு பெயர் மாற்றம் வேண்டும். அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் அலுவலர்கள், அடிப்படை பணியாளர்கள், குடும்பத்தினருக்கு அங்கு சிறப்பு வார்டுகளில் அனைத்து சிகிச்சைகளும் இலவசமாக அளிக்க வேண்டும்.
மருத்துவத்துறையில் இறப்பு சதவீதம் அதிகமாக உள்ளது. எனவே கருணை அடிப்படையில் நிரப்பப்படாமல் உள்ள காலிப் பணியிடங்கள் 25 சதவீதம் உள்ளதை 50 சதவீதமாக மாற்றி நிரப்ப வேண்டும் என்றார்.