/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வரத்துக் கால்வாய்கள் ஆக்கிரமிப்பு விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறி
/
வரத்துக் கால்வாய்கள் ஆக்கிரமிப்பு விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறி
வரத்துக் கால்வாய்கள் ஆக்கிரமிப்பு விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறி
வரத்துக் கால்வாய்கள் ஆக்கிரமிப்பு விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறி
ADDED : டிச 21, 2025 06:14 AM
எஸ். புதுார்: எஸ்.புதுார் ஒன்றியத்தில் வரத்துக் கால்வாய்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லாமல் வறண்டு கிடக்கின்றன.
இவ்வொன்றியத்தில் பொதுப்பணித்துறை, ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஜமீன் கண்மாய்களுக்கு உட்பட்ட 100க்கும் மேற்பட்ட பெரிய, சிறிய கண்மாய்கள் உள்ளன. இது தவிர ஏராளமான சிறிய குட்டைகளும் உள்ளன. மழைக்காலங்களில் இம்மலைத்தொடர்களில் லேசான மழை பெய்தாலே கால்வாயில் ஓடி வந்து இப்பகுதி நீர்நிலைகளில் தேங்கும். அத்தண்ணீரைக் கொண்டு இப்பகுதி விவசாயிகள் பயிர் சாகுபடி செய்வதற்கும், கால்நடைகளின் குடிநீர் தேவைக்கும் பயன்படுத்தி வந்தனர்.
சில ஆண்டுகளாக இவ்வொன்றியத்தில் உள்ள வரத்துக் கால்வாய்கள் இருந்த இடம் தெரியாமல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடம் இருந்து நிலங்களை வாங்கி சிலர் பண்ணை நிலங்களாக மாற்றி வருகின்றனர். அப்படி மாற்றும் போது அருகே உள்ள மேய்ச்சல் நிலம், வரத்துக் கால்வாய்களையும் மண்ணைக் கொண்டு மூடி ஆக்கிரமித்து விடுகின்றனர். இதனால் சங்கிலித் தொடரில் உள்ள கண்மாய்களுக்கு தண்ணீர் சென்று சேர முடிவதில்லை. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். இப்பகுதி மக்களின் ஒரே தொழில் விவசாயம் மட்டுமே. அதுவும் தடைபட்டால் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்றும், எனவே அனைத்து வரத்துக் கால்வாய்களையும் கண்டுபிடித்து அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி மீட்க விவசாயிகள் வலியு றுத்தி உள்ளனர்.

