/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் தீராத போக்குவரத்து நெருக்கடி
/
திருப்புவனத்தில் தீராத போக்குவரத்து நெருக்கடி
ADDED : ஆக 30, 2025 04:01 AM

திருப்புவனம்: திருப்புவனத்தில் தினசரி ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக தொலை துா பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் டிரைவர்களும் பயணிகளும் பரிதவிக்கின்றனர்.
மதுரையில் இருந்து ராமேஸ்வரம், பரமக்குடி, கமுதி, இளையான்குடி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் திருப்புவனம் வந்து செல்கின்றன.
திருப்புவனத்தில் வாரச்சந்தை நடைபெறும் இடம் தொடங்கி போலீஸ் ஸ்டேஷன் வரை தினசரி வாகனங்கள் ஊர்ந்து தான் செல்ல முடியும்.
சாலையின் இருபுறமும் டூவீலர்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. ஷேர் ஆட்டோக்கள், கடைகளுக்கு சரக்கு ஏற்றி வரும் வாகனங்கள் நிறுத்தப் படுகின்றன.
போக்குவரத்து நெரிசலை சரி செய்ய போலீசார் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள போலீஸ் பூத்தைச் சுற்றிலும் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. நரிக்குடி பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் திரும்ப முடியாமல் சிரமம் ஏற்படுகிறது.
பஸ் டிரைவர் கூறுகையில்: திருப்புவனம் நகரில் சாலையோர ஆக்கிரமிப்பை அகற்றிய பின் சாலை அகலப்படுத்தும் பணி நடந்தது.
ஆனால் சாலை பணி முடிந்த பின் மீண்டும் பலரும் கடைகள் அமைத்து விட்டனர். இதனால் எதிர் எதிரே வாகனங்கள் வந்தால் விலக முடிவதில்லை.
நகரை கடக்க குறைந்த பட்சம் 20 நிமிடங்கள் ஆகின்றன. பஸ், ரயில் களுக்கு செல்லும் பயணிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் எங்களுடன் தகராறு செய்கின்றனர்.
நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டும் நெரிசல் குறையவே இல்லை, என்றனர்.