நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம் : திருப்புவனம் பழையூர் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்  இந்தாண்டு புதிதாக  ஏழு மாணவ, மாணவியர் சேர்ந்துள்ளனர்.
மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் வட்டார கல்வி அலுவலர்கள் பால்பாண்டி,லதாதேவி தலைமையில் நடந்தது.  தலைமையாசிரியை சாந்தி புதிய மாணவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.
* கூட்டுறவு பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தொடக்க கல்வி அலுவலர் மாரிமுத்து தலைமையிலும், வட்டார கல்வி அலுவலர் இந்திராணி, ஊராட்சி தலைவர் மந்தக்காளை முன்னிலையிலும் மாணவர் சேர்க்கை விழா நடந்தது. தலைமை ஆசிரியை பாக்கியலட்சுமி வரவேற்றார். புதிய மாணவர்கள் வரவேற்கப்பட்டனர்.

