தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ தொழில் முனைவோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி  

தொழில் முனைவோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி  

தொழில் முனைவோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி  


UPDATED : செப் 03, 2026 05:05 PM

ADDED : செப் 03, 2026 03:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 03, 2026 05:05 PM ADDED : செப் 03, 2026 03:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை:மதுரை கே.புதுார் தொழிற்பேட்டையில் தொழில் முனைவோர் விழிப்புணர்வு பயிற்சி செப்., 5 ம் தேதி நடைபெறும் என குறு, சிறு, நடுத்தர தொழில் மைய உதவி இயக்குனர் உமா சந்திரிகா தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் வசதியாக்கல் அலுவலகம், மதுரை கிளை நடத்தும் இலவச ஒரு நாள் தொழில் முனைவோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரை கே புதூர் தொழிற்பேட்டையில் இயங்கும் MSME திறன் மேம்பாட்டு மையத்தில் நடக்க உள்ளது. இலவச ஒரு நாள் கருத்தரங்கத்தில் பங்கேற்பவர்களுக்கு சவுண்ட் சிஸ்டம் தொடர்பான சேவை சார்ந்த தொழிலின் அடிப்படை, முதல் முறையாக தொழில் செய்யும் நபர்களுக்கு கிடைக்கும் அரசாங்க திட்டங்கள், ஒலி,ஒளி மேலாண்மை குறித்த செயல்விளக்கம், தொழில் தொடங்க உதவும் வங்கி கடன் தொடர்பான திட்டங்கள் குறித்த தகவல்கள் வழங்கப்படும்.

இக்கருத்தரங்கு காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை நடக்கும். சவுண்ட் சிஸ்டம் தொடர்பான சுய தொழில் செய்ய விரும்பும் இளைஞர்கள் நிகழ்ச்சியில் பங்கு பெற்று பயனடையலாம். முதலில் வருகை தரும் 80 பேருக்கு மட்டுமே அனுமதி. நிகழ்ச்சியில் பங்கேற்க 98420 35441 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us