/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பள்ளி, கல்லுாரிகளில் சமத்துவ பொங்கல் விழா
/
பள்ளி, கல்லுாரிகளில் சமத்துவ பொங்கல் விழா
ADDED : ஜன 14, 2024 05:00 AM
சிவகங்கை : சிவகங்கை அரு.நடேசன் செட்டியார் நடுநிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா வட்டார கல்வி அலுவலர் பாலாமணி தலைமையில் நடந்தது. தலைமை ஆசிரியர் பாண்டியராஜன் வரவேற்றார்.
கோலப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு வட்டாரக்கல்வி அலுவலர் பரிசுகள் வழங்கினார்.
இடையமேலுார் விக்னேஸ்வரா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் பொங்கல் விழா தாளாளர் ஜெயதாஸ் தலைமையில் நடந்தது. முதல்வர் ஜான்சி வரவேற்றார்.
மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் பட்டிமன்றம், பெற்றோர்களுக்கு கோலப் போட்டிகள் நடந்தது. இடையமேலுார் ஆரம்ப சுகாதாரநிலைய டாக்டர் நாகநாதன் பரிசுகள் வழங்கினார்.
சிவகங்கை நகராட்சியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. நகராட்சி தலைவர் துரை ஆனந்த் தலைமை வகித்தார். வார்டு கவுன்சிலர்கள், நகராட்சி பணியாளர்கள், கலந்துகொண்டனர்.
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் முத்துலட்சுமி, ஸ்ரீதர் கலந்துகொண்டனர்.
காரைக்குடி அருகேயுள்ள மானகிரி செட்டிநாடு பள்ளியில் பொங்கல் விழா நடந்தது.
சேர்மன் எஸ்.பி., குமரேசன், சாந்தி, துணை சேர்மன் அருண்குமார் ப்ரீத்தி கலந்து கொண்டனர்.சி.ஐ.எஸ்.எப்., சீனியர் கமாண்டன்ட் சங்கர் குமார் ஜா கலந்து கொண்டார். மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடந்தது. காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில், பள்ளி தாளாளர் சேதுராமன் நிர்வாக இயக்குனர் அஜய் யுக்தேஷ் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அரியக்குடி ஊராட்சியில் ஊராட்சி தலைவர் சுப்பையா தலைமையில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.
காரைக்குடி ராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா மற்றும் விவேகானந்தர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ஜே.சி.ஐ மண்டல இயக்குனர் ரங்கசாமி, பள்ளி முதன்மை முதல்வர் நாராயணன் பள்ளிச் செயலாளர் கார்த்திக், விஜய சங்கீதா பள்ளி முதல்வர் ராஜ்குமார் ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.
காரைக்குடி நேஷனல் கல்வி குழுமத்தில் பொங்கல் விழா நடந்தது. தாளாளர் சையது தலைமையேற்றார். இயக்குனர் மனோகர் முன்னிலை வகித்தார். முதல்வர் நவீன் வரவேற்றார். மாணவர்களின் சிலம்பம், சுருள்வாள், கடராக் கத்தி கலைகளை இங்கிலாந்து ஸ்விட்சர்லாந்து நாட்டு விருந்தினர் கண்டு ரசித்தனர்.
திருப்புத்துார்:மவுண்ட் சீயோன் சில்வர் ஜூபிலி பள்ளியில் நடந்த விழாவிற்கு கல்விக் குழுமத் தலைவர் பிளாரன்ஸ் ஜெயபாரதன் தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் டாக்டர் ஜெய்சன் கீர்த்தி ஜெயபாரதன், விவியன் ஜெய்சன் முன்னிலை வகித்தனர்.
தாமஸ் வி.ஜான் உரி அடித்தல் போட்டியில் பங்கேற்று பொங்கல் விழாவை துவக்கினார். முதல்வர் சத்யா,ஒருங்கிணைப்பாளர் அர்ஸியா பாத்திமா, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
*இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லுாரியில் நடைபெற்ற பொங்கல் விழாவை முதல்வர் ஜபருல்லாகான் துவக்கி வைத்தார்.செயலாளர் ஜபருல்லாகான் தலைமை வகித்தார்.
முதல் நாள் விழாவில் பாட்டு மன்றம் நடைபெற்றது. 2ம் நாள் பொங்கல் வைத்து கொண்டாடினர். துணைமுதல்வர் ஜஹாங்கிர் நன்றி கூறினார். ஒருங்கிணைப்பாளர் சபினுல்லாகான், கல்வியியல் கல்லுாரி முதல்வர் முகமது முஸ்தபா,ஆட்சிக்குழு செயலாளர்,உறுப்பினர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
சிங்கம்புணரி: சிங்கம்புணரி எஸ்.எஸ்.மெட்ரிக் பள்ளியில் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் விழா மற்றும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தாளாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். செயலாளர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். முதல்வர் ராஜேஸ்வரி வரவேற்றார். மாணவர்கள் விவேகானந்தர் உடை அணிந்தும் பாரம்பரிய வேட்டி சேலை அணிந்தும் பங்கேற்றனர். 9ம் வகுப்பு மாணவர்களின் பட்டிமன்றம் நடைபெற்றது.
தமிழாசிரியர் பாலமுருகன் நடுவராக வழி நடத்தினார். துணை முதல்வர் பூமிநாதன் நன்றி கூறினார்.

