ADDED : ஜன 11, 2026 05:21 AM
அ நிறம் | அளவு
இளையான்குடி: இளையான்குடியில் தி.மு.க., நகர இளைஞரணி சார்பில் சமத்துவ பொங்கல் விழா நகர் செயலாளர் நஜூமுதீன் தலைமையிலும், வடக்கு ஒன்றிய செயலாளர் மதியரசன்,கிழக்கு ஒன்றிய செயலாளர் தமிழ்மாறன் மற்றும் தாளாளர் காதர் பாட்சா, பேரூராட்சி துணைத் தலைவர் இப்ராஹிம் முன்னிலையிலும் நடைபெற்றது.நகர இளைஞரணி அமைப்பாளர் பைரோஸ் கான் வரவேற்றார்.
எம்.எல்.ஏ.,தமிழரசி மக்களுக்கு வேட்டி,சேலை வழங்கினார்.மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் காளிமுத்து, கூட்டுறவு கடன் சங்க முன்னாள் தலைவர் தமிழரசன், நிர்வாகிகள் கண்ணன், சிவனேசன், கருணாகரன் கலந்து கொண்டனர்.
