/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிங்கம்புணரி காளைகளுக்காக வந்திறங்கிய ஈரோடு துண்டுகள்
/
சிங்கம்புணரி காளைகளுக்காக வந்திறங்கிய ஈரோடு துண்டுகள்
சிங்கம்புணரி காளைகளுக்காக வந்திறங்கிய ஈரோடு துண்டுகள்
சிங்கம்புணரி காளைகளுக்காக வந்திறங்கிய ஈரோடு துண்டுகள்
ADDED : ஜன 10, 2025 05:10 AM

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் மஞ்சுவிரட்டு காளைகளுக்காக ஈரோடு துண்டுகள் விற்பனைக்கு வந்துள்ளது.
சிங்கம்புணரி சுற்றுவட்டாரத்தில் மாட்டுப்பொங்கல் தொடங்கி அடுத்த சில மாதங்களுக்கு தொடர் மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம். இப்பகுதியில் நடைபெறும் மஞ்சுவிரட்டுகளின் போது விவசாயிகள் தங்களின் காளைகளுக்கு வண்ணத்துண்டு, சலங்கை, மாலை உள்ளிட்ட அலங்காரங்களை அணிவிப்பர்.
இப்பகுதி மஞ்சுவிரட்டு காளைகளுக்காக ஆண்டுதோறும் ஈரோடு வியாபாரிகள் சிலர் இங்கு முகாமிட்டு அலங்கார துண்டுகளை விற்பனை செய்வர். இந்தாண்டு வழக்கம்போல் 20 க்கும்மேற்பட்ட வியாபாரிகள் கடைவீதியில் கடை போட்டுள்ளனர்.
இன்பராஜ், துண்டு வியாபாரி, ஈரோடு; கடந்த 20 ஆண்டுகளாக சிங்கம்புணரிக்கு துண்டு விற்பனைக்கு வந்த செல்கிறோம். இங்கு மக்கள் வீட்டுமாடுகளுக்கும், கோயில் காளைகளுக்கும் மாட்டுப்பொங்கல், மஞ்சுவிரட்டின் போது ஈரோடு துண்டுகளை விரும்பி அணிவர். மாட்டுப்பொங்கல் வரை இங்கு தங்கியிருந்து துண்டுகளை விற்போம். ஈரோடு துண்டுகள் அதிக நீள, அகலம் கொண்டதாக இருப்பதால் மக்களும் விரும்பி வாங்கிச்செல்வர். ரூ. 50,60,70 விலையில் துண்டுகள் உள்ளது, என்றார்.