நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி : இளையான்குடி நகர த.மு.மு.க., செயற்குழு கூட்டம் நகரத் தலைவர் ஜலாலுதீன் தலைமையில் நடந்தது. மாவட்ட தலைவர் துல்கருணை முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் வக்ப் திருத்தச் சட்டத்தை கண்டித்து மதுரையில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்வது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
த.மு.மு.க., ம.ம.க., நகர செயலாளர் லாபீர், அகமது ஜலால், நகரப் பொருளாளர் இம்ரான் கான், மருத்துவ அணி செயலாளர் அல்ஹாப், தொழிற்சங்க செயலாளர் சாகுல் ஹமீது, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சையது இப்ராஹிம் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

