ADDED : ஆக 22, 2026 06:32 PM
காரைக்குடி, ஆக.
23-
காரைக்குடி மகர் நோன்பு திடலில் நற்பவி கிரியேட்டர்ஸ் சார்பில் தாஜ்மஹால் வீட்டு உபயோகப் பொருட்காட்சி ஆக. 7 முதல் தொடங்கி தினமும் மாலை 5:00 மணிக்கு நடந்து வருகிறது. இதில் பேன்சி பொருட்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள், சமையலறை பொருட்கள், அழகு சாதன பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மைகள் உட்பட ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைவரும் விளையாடி மகிழ ஜெயின்ட் வீல், கொலம்பஸ், சிலம்போ பிரேக் டான்ஸ், போஸ்டர் ரயில், பலுான் வாட்டர் போர்ட், கார் பைக் மயில் மகாராஜா ரயில் ஜெட் போன்ற ஏராளமான ராட்டினங்கள் உள்ளன. உண்டு மகிழ டில்லி அப்பளம், ஊட்டி மிளகாய் பஜ்ஜி, காலிபிளவர் பாவ், பானி பூரி, மசால் பூரி உருளைக்கிழங்கு ஸ்பிரிங் ரோல் ஜிகர்தண்டா ரோஸ்மில்க் உள்ளிட்ட பொருட்கள் உள்ளன. பொருட்காட்சி வரும் செப்.4ம் தேதி வரை நடைபெறுவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
