ADDED : ஜன 06, 2024 05:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூவந்தி: பூவந்தி மதுரை சிவகாசி நாடார் பயோனியர் மீனாட்சி மகளிர் கலைக் கல்லுாரியில் மகளிர் சுயஉதவி குழுக்கள் தயாரித்த பொருட்கள் குறித்த கண்காட்சி நடந்தது.
முதல்வர் விசுமதி திறந்து வைத்தார். சிவகங்கை மாவட்ட மகளிர் திட்ட இணை இயக்குனர் கவிதாபிரியா முன்னிலை வகித்தார்.
கண்காட்சியில் மகளிர் சுய உதவி குழுவினர் தயாரித்த சணல் பைகள், அலங்கார பொருட்கள், ஆபரணங்கள், சிறுதானிய உணவு பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.