ADDED : டிச 26, 2024 04:59 AM

காரைக்குடி: காரைக்குடி மகர் நோன்பு திடலில் நற்பவி கிரியேட்டர் சார்பில் பொருட்காட்சி நடைபெறுகிறது.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் புகைப்பட நுழைவு வாயில் மற்றும் ராட்டினங்களுடன் கூடிய இயந்திர மிருகங்களின் அட்டகாச வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சியை மேயர் முத்துத்துரை தொடங்கி வைத்தார். தினமும் மாலை 5:00 மணி முதல் இரவு 9:30 வரை நடைபெறுகிறது.
பொருட்காட்சியில் 30 அடி உயர இயந்திர கிங்காங், பிரம்மாண்ட யானை, சிங்கம், புலி நீர்யானை மயில் அழகிய கிளிகள் டைனோசர்கள் மற்றும் பல்வேறு இயந்திர விலங்குகள் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் கோஸ்டல், கொலம்பஸ், 3டி ஷோ, பேய் வீடு, ஸ்னோ வேல்ட், ஜீப் ஜம்பிங் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் உள்ளன. பெண்களுக்கு தேவையான பேன்சி பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், ஸ்டேஷனரி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.

