/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
எதிர்பார்ப்பு பெரியாறு நீட்டிப்பு கால்வாய் நிரந்தரமாகுமா; சிங்கம்புணரி விவசாயிகள் துணை முதல்வரிடம்
/
எதிர்பார்ப்பு பெரியாறு நீட்டிப்பு கால்வாய் நிரந்தரமாகுமா; சிங்கம்புணரி விவசாயிகள் துணை முதல்வரிடம்
எதிர்பார்ப்பு பெரியாறு நீட்டிப்பு கால்வாய் நிரந்தரமாகுமா; சிங்கம்புணரி விவசாயிகள் துணை முதல்வரிடம்
எதிர்பார்ப்பு பெரியாறு நீட்டிப்பு கால்வாய் நிரந்தரமாகுமா; சிங்கம்புணரி விவசாயிகள் துணை முதல்வரிடம்
ADDED : நவ 15, 2025 05:26 AM

சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் துணை முதல்வர் உதயநிதி, பெரியாறு நீட்டிப்பு கால்வாயை நிரந்தரமாக்க அறிவிப்பு வெளியிடுவாரா என்று விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இத்தாலுகாவின் முக்கிய பாசன ஆதாரமாக விளங்கும் பெரியாறு 7 வது பிரிவு நீட்டிப்புக் கால்வாய் முன்னாள் அமைச்சர் செ.மாதவன் முயற்சியால் கொண்டு வரப்பட்டது. விரைவில் நிரந்தர கால்வாயாக மாற்றப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததால் கால்வாய் கட்ட விவசாயிகள் நிலம் வழங்கினர். தற்போதைய சூழலில் நிரந்தர மண் கால்வாய் அனைத்தும் சிமென்ட் கால்வாயாக மாற்றப்பட்டதாலும், மற்ற கால்வாய் பகுதிகளில் விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாறி பாசனப்பரபபை குறைந்ததாலும் அப்பகுதிகளில் தண்ணீர் பயன்பாடு குறைந்துள்ளது.
சில வருடங்களாகவே அணையில் தண்ணீர் மிச்சப்பட்டு வருகிறது. ஆனால் நீட்டிப்பு கால்வாய் என்பதால் சிங்கம்புணரி பகுதிக்கு கண் துடைப்புக்காக சில நாட்கள் மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டு, அதுவும் ஓரிரு கண்மாய்களை மட்டுமே அடைகிறது. இதனால் குடிநீர், பாசன தேவைக்கு தண்ணீர் தட்டுப்பாட்டால் இத்தாலுகா மட்டுமின்றி திருப்புத்துார் தாலுகா மக்களும் அவதிப்படுகின்றனர். இதனால் தங்களுக்கு ஏற்கனவே வாக்குறுத்தி அளித்தபடி 7வது பிரிவு கால்வாயை நிரந்தரமாக்க விவசாயிகள் அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதுவரை முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, பழனிசாமி, பன்னீர்செல்வம் தற்போதைய முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி வரை அனைவரிடமும் இதுகுறித்து மனு அளிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் தரப்பிலும் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டாலும் கிணற்றில் வீசிய கல்லாகவே மனுக்களின் நிலை உள்ளது. இந்நிலையில் பெரியாறு நீட்டிப்பு கால்வாய், இப்பகுதிக்கு வர காரணமாக இருந்த முன்னாள் அமைச்சர் செ.மாதவன் சிலை இன்று சிங்கம்புணரியில் திறக்கப்படவுள்ள நிலையில் கால்வாய் நிரந்தர அறிவிப்பை துணை முதல்வர் உதயநிதி வெளியிட வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
ராம.அருணகிரி, பெரியாறு நீட்டிப்பு கால்வாய் தலைவர்; கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத குறையாக இப்பகுதி விவசாயிகள் உள்ளனர். இக்கால்வாய் நீரை நம்பி சிங்கம்புணரி, திருப்புத்துார் பகுதியில் 9159 ஏக்கர் நேரடி பாசனமும், 12,445 ஏக்கர் மறைமுக பாசனமும் உள்ளது. கால்வாய் கட்டப்பட்ட போது விரைவில் நிரந்தரம் ஆக்கித் தருகிறோம் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததின் பேரில் விவசாயிகள் கால்வாய் கட்ட நிலம் தந்தனர். ஆனால் 40 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் கால்வாயை நிரந்தரமாக்க எந்த நடவடிக்கையும் இல்லை. துணை முதல்வர் பெரியாறு நீட்டிப்பு கால்வாயை நிரந்தரமாக்க நடவடிக்கை எடுத்து வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகளில் எதிர்பார்ப்பாக உள்ளது. நல்ல அறிவிப்பை வெளியிடுவார் என விவசாயிகள் நம்புகிறோம், என்றார்..

