ADDED : செப் 28, 2026 06:55 PM
அ நிறம் | அளவு
சிங்கம்புணரி, செப். 29-
சிங்கம்புணரியில் சேவுகா அரிமா சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. முகாமை பேரூராட்சித் தலைவர் அம்பலமுத்து, அரிமா சங்க முன்னாள் தலைவர் செந்தில்குமார் தொடங்கி வைத்தனர். இதில் கண் புரை, கண் நீர் அழுத்தம் உள்ளிட்ட கண் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 200க்கும் மேற்பட்டோர் பயன்பெற்றனர். முகாமில் முன்னாள் மண்டல தலைவர் சந்திரசேகர், தலைவர் முருகேசன், செயலர் அர்ஜுனன், பொருளாளர் சண்முகசுந்தரம் பங்கேற்றனர்.
