பெயர்ந்து விழும் டைல்ஸ் கற்கள் விபத்து அபாயம் தொடர்கிறது
பெயர்ந்து விழும் டைல்ஸ் கற்கள் விபத்து அபாயம் தொடர்கிறது
ADDED : செப் 20, 2026 12:31 AM

திருப்புத்துார்: திருப்புத்துாரில் மதுரை ரோடு- தாலுகா அலுவலக ரோடு சந்திப்பில் நிறுவப்பட்டுள்ள மருதுபாண்டியர் நினைவு வளைவில் ஒட்டப்பட்ட டைல்ஸ் கற்கள் பெயர்ந்து விழுவதால் விபத்து அபாயம் காணப்படுகிறது.
திருப்புத்துார் தாலுகா அலுவலகம் அருகில் அரசு மருதுபாண்டியர் நினைவு மண்டபம் உள்ளது.
மண்டபத்திற்கு செல்லும் தாலுகா அலுவலக ரோடு, மதுரை ரோட்டில் சந்திக்கும் இடத்தில் 20 ஆண்டுகளுக்கு முன் மருதுபாண்டியர் நினைவு வளைவு கட்டப்பட்டது. அந்த கான்கிரீட் கட்டட வளைவில் அலங்காரத்திற்காக சுற்றிலும் கிரானைட் கற்கள் ஒட்டப்பட்டன. அவை தற்போது பெயர்ந்து விழத்துவங்கியுள்ளன.
இரு துாண்களின் அடிப்புறம் பெயர்ந்துள்ளன. தற்போது மேல் வளைவிலிருந்தும் பெயர்ந்து விழத் துவங்கியுள்ளது. முக்கியமான போக்குவரத்து சந்திப்பான இங்கு மக்கள் நடமாட்டம் அதிகம். கல்லுாரி, பள்ளி, அரசு மருத்துவமனை செல்லும் பலரும் இந்த வழியாகச் செல்வதால் இந்த வளைவிற்கு அருகாமையில் மக்கள் நடமாட்டம் தொடர்ந்து காணப்படும். இதனால் மேலும் கிரானைட் கற்கள் விழுந்து விபத்து ஏற்படும் முன் போதிய பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
