ADDED : ஆக 16, 2025 11:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி; எஸ்.புதுார் அருகே இரணிபட்டி பள்ளபட்டியை சேர்ந்தவர் மேகவர்ணம் மகன் லோகநாதன் 48, விவசாயி.
இவர் ஆக. 15 ம் தேதி வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார். மீண்டும் வீட்டிற்கு திரும்பாத நிலையில் தந்தை மேகவர்ணம் சென்று பார்த்த போது, பம்புசெட்டிற்கு செல்லும் வழியில் மின்சாரம் தாக்கி லோகநாதன் இறந்து கிடந்தது தெரிந்தது. புழுதிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.